ஒரு ஆப்டிமிஸ்ட் (அனைதிலும் நிறையையே காண்பவர்) குறைகளிலும் நிறையை காண்பார் ஆனால் ஒரு பெசிமிஸ்ட் (அனைதிலும் குறையையே காண்பவர்) நிறைகளிலும் குறையை காண்பார்.
இதற்கு ஒரு கதையை பார்ப்போம்.
வேலு ஒரு வாத்து வேட்டைக்காரன். ஒரு நாள் ஒரு சந்தையில் தண்ணீரில் நடக்கும் நாய் ஒன்றை தன் வேட்டைக்கு உதவியாக இருக்கும் என்று அதை வாங்கினான். தண்ணீரில் நடக்கும் நாய் என்று கூறினால் தன் நண்பர்கள் யாரும் நம்ப மாட்டார்கள் என்று யாரிடமும் கூறவில்லை. மாறாக தன் நண்பரிடத்தில் நேரடியாக காண்பிக்க நினைத்தான். எனவே தன் நண்பன் ராமுவை, இயற்கையாகவே அவன் ஒரு பெசிமிஸ்ட், தன்னுடன் வேட்டைக்கு வருமாறு அழைத்தான். வேட்டையின் போது ஒவ்வொரு முறையும் வேலு வாத்தை சுட்டவுடன் அவனுடைய நாய் நீரில் வேகமாக நடந்து சென்று, தன் கால் பாதம் மட்டுமே நனையும் விதத்தில், கவ்விக் கொண்டு வந்தது. இது போல பல முறை வேலுயும் வாத்தை சுட்டான் அவனுடைய நாயும் நீரில் நடந்து சென்று எடுத்து வந்தது.வேட்டையை முடித்து திரும்பும் வேலையில் வேலு ராமுவிடம் இன்று நீ எதாவது வித்தியாசமாக கண்டாயா என்று வினவினான். ஆம் வேலு நானே உன்னிடம் சொல்ல வேண்டும் என்று இருந்தேன். பாவம் அந்த நாயிக்கு நிச்சல் தெரியலல? என்று கேட்டானே பாருங்க....
Monday, December 31, 2007
வித்தியாசம்
Libels :
Miscellaneous
புதிய சிந்தனையும் முன்னேற்றமும்
முன்னேற்றத்தின் வேகம் கண்டுபிடித்தலின் வேகத்தைப் பொருத்தது.
எ.கா: பானை செய்யும் சக்கரத்தை செங்குத்தாக நிறுத்தி வண்டிக்கு பூட்டலாம் என்று கண்டுபிடிக்க கிட்டதட்ட ஏழு நூறு ஆண்டுகள் ஆனது.
ஆகவே புதிதாக சிந்தியுங்கள், முன்னேறுங்கள்.
Libels :
Miscellaneous
எப்போதோ எங்கயோ படிச்சது !!!
இந்த கவிதை எப்போதோ எங்கயோ படிச்சது
"பொத்தி வளர்த்த ரோஜா செடி
குத்தி பார்கிறது
ஆனால் சப்பி எறிந்த மாங்கொட்டையோ
நிழல் தருகிறது !"
Libels :
Miscellaneous
பிளாக் உருவாக்கியாச்சு ஆனா என்ன எழுத ?
ஏதோ எல்லோரும் எழுதுறாங்கன்னு நானும் பிளாக் உருவாக்கிட்டேன் ஆனா பாருங்க என்ன எழுதுறதுன்னு தெரியல அதனால ஒரு பயன் தருகிற மாதிரி ஒரு ஆங்கிலம்-தமிழ் அகராதிகள் சுட்டி http://www.tamilvu.org/library/libcontnt.htm
மிகவும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
Libels :
Usefull information
Subscribe to:
Posts (Atom)