Saturday, March 22, 2008

மென்பொருள் இல்லாமல் வலைத்தளங்களை தடை செய்வது எப்படி ?

தங்களுக்கு ஒரு சில வலைத்தளங்களை எந்த வித மென்பொருளோ அல்லது வழிச்செயலி (router) மூலமாக தடை செய்யாமல் தங்கள் கணிபொறியிலேயே தடை செய்ய வேண்டுமா ? ஆம் எனில் கிழ்க்கண்ட முறையை கையாளவும்
மை கம்ப்யூட்டர் --> சி டிரைவ் --> விண்டோஸ் --> சிஸ்டம் 32 --> டிரைவர்ஸ் --> etc. இதில் "hosts" என்னும் கோப்பை "notepad" மூலமாக திறக்கவும்.
"127.0.0.1 Local host" என்பதற்கு கீழ் "127.0.0.2 தாங்கள் தடை செய்ய நினைக்கும் வலைதளத்தின் முகவரி".
உதாரணம் :
127.0.0.1 Local host
127.0.0.2 http://www.thagavalnilayam.blogspot.com/
127.0.0.3 http://www.google.co.in/
...
இப்படி நீங்கள்
தடை செய்ய நினைக்கும் வலையதளங்களை தடை செய்யலாம்.


Thursday, March 20, 2008

இணையதள வேகத்தை அதிகரிக்க - பாகம் 1

தாங்கள் விண்டோஸ் உபயோகிப்பவரா ? உங்கள் இணைய தள அகலப்பட்டியின் (Braodband) வேகத்தை சற்று கூட்ட வேண்டுமா? ஆம் என்றால் இந்த யுக்தி உங்களுக்குத்தான்.

நான் ஏன் விண்டோஸ் உபயோகிப்பவரா என்று கேட்டேன் என்றால் விண்டோஸ் நமக்கு தெரியாமலே 20% எடுத்து கொள்கிறது.

என்னாங்க என் மேல நாம்பிக்கை இல்லையா, நீங்களே பாருங்க. உங்கள் "ஸ்டார்ட்" பட்டனை கிளிக் செய்யவும், "ரன்"-யை கிளிக் செய்யவும். "ரன்"-யில் "gpedit.msc" என்று தச்சிடவும்.

இப்பொழுது உங்களுக்கு "Group Policy" என்ற விண்டோ வரும், அதில் உங்கள் இடது புரத்தில் கீழ்காணும் இடத்திற்கு செல்லவும் :

Computer Configuration --> Administrative Templates --> Network --> QOS Packet Scheduler.

இப்பொழுது தங்கள் வலது புரத்தில் "Limit reservable bandwidth" என்பதை வலது கிளிக் செய்து "Properties"-யை கிளிக் செய்யவும், "Settings"-யில் "Not configured" என்று இருக்கும் ஆனால் Default-ஆக 20 % விண்டோஸ் எடுத்துக் கொள்கிறது, எனவே "Enabled" என்பதில் கிளிக் செய்து 20 % என்று இருப்பதை 0 % என்று மாற்றவும். மாற்றி விட்ட பின்பு "OK" என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது சற்று வேகமாக உங்கள் இணையதளம் வேலை செய்யுங்க. இன்னும் இது போல இணையதள வேகத்தை அதிகரிக்க பல யுக்திகள் இருக்குங்க, அவற்றை வரும் வாரங்களில் பார்போம்.






Tuesday, March 18, 2008

விண்டோஸ் மைக்ரோசாப்ட் போட்டோஸ்டோரி மென்பொருள்

விண்டோஸ் மைக்ரோசாப்ட் போட்டோஸ்டோரி இது ஒரு இலவச மென்பொருள். இதனை கொண்டு நம்முடைய டிஜிட்டல் படங்களை ஒரு சிலைடு ஷோ-வாக அதாவது ஒரு வீடியோ-வாக தங்கள் தொலைக்காட்சியிலோ, கணினியிலோ அல்லது கைபெசியிலோ காணலாம், ரசிக்கலாம். CD-யாகவோ அல்லது DVD-யாகவோ எரித்து வைத்துக் கொள்ளலாம். இந்த மென்பொருள் "Ken Burns Effect" அடிப்படையை பயன் படுத்துவதால் தங்கள் டிஜிட்டல் படங்களை பெரியதாகியோ அல்லது சிரியதாகியோ ஒரு அசையும் படமாக (with slow zooming and panning effects ) காட்டலாம்.
அது மட்டுமில்லாமல் பின்னணி இசை, படங்களுக்கு தக்கவாரு தங்களுடைய பின்னுட்டம் மற்றும் ஒரு படம் காண்பிக்க படும் நேரம், அது எந்த விதத்தில் இடம் பெற வேண்டும் என்று தாங்களே நிர்ணயிக்கலாம்.
அப்புறம் என்ன சும்மா புகுந்து விளையாடுங்கள்.
விண்டோஸ் மைக்ரோசாப்ட் போட்டோஸ்டோரியை இறக்கம் செய்ய கிழ்கண்ட சுட்டியை சொடுக்கவும் :
விண்டோஸ் மைக்ரோசாப்ட் போட்டோஸ்டோரி மென்பொருள்

தமிழில் எழுத உதவும் மென்பொருள்கள்

உங்களுக்கு தமிழை தமிழால் தட்டச்சு செய்ய வேண்டுமெனில் கிழ்கண்ட சுட்டியின் மூலம் "எகலப்பை", "பரஹா" என்னும் மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி தமிழை தமிழால் எழுதலாம்.
எகலப்பை
பரஹா

இல்லை, எனக்கு தமிழில் தச்சிட தெரியாது என்றாலும் இந்த மென்பொருளை கொண்டு தங்களால் தமிழில் எழுத முடியும், அது தாங்க தங்கிலிஷ் முறை. அம்மா என்று தச்சிட வேண்டும் என்றால் "ammaa" என்று தச்சிட வேண்டும்.

இல்லை, என்னால் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த மென்பொருளை நிறுவ முடியாது என்றால் கிழ்கண்ட சுட்டியின் மூலம் நிகழ்நிலையாக தச்சிடலாம்.
நிகழ்நிலையாக தச்சிட

நாம் எப்படி “TimesNewRoman” எழுதுருவடிவத்திலிருந்து “Lucida Galligraphy” எழுதுருவடிவத்திற்கு மிக சுலபமாக மாறுகிறோம் அது போல் தமிழில் செய்ய இயலாது மறுபடியும் எந்த எழுதுருவடிவத்தில் வேண்டுமோ அந்த எழுதுருவடிவத்தில் தச்சிட வேண்டும், அந்நேரங்களில் இந்த எழுதுருவடிவ மாற்றி சுட்டி உபயோகப்படும்.
எழுதுருவடிவ மாற்றி


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே தரவும்


Powered by FeedBlitz