Saturday, April 19, 2008

இணையம் வழி இலவச குறுஞ்செய்தி (Free SMS via Web)

நாம எவ்வளவு சம்பாதித்தாலும் இலவசம் என்று சொன்னா வேணாம் என்று சொல்கிறோமா? என்ன பண்ணுவது அது நம் இயல்பு (அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன?). இணையம் வழியாக இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப ஏதாவது இணையதளம் இருக்கிறதா என்று தேடிபார்த்தேன். பலன் நிறைய இணையதளம் என் கண்ணில் சிக்கியது, ஆனால் பாருங்க நமக்குன்னு வரும்போது எதுவுமே வேலை செய்யாது அல்லது 10 மணி நேரத்திற்கு பிறகோ அல்லது மறு நாளைக்கோ போய் சேரும் (உங்களுக்கும் அப்படிதான் என்று நினைக்கிறேன், சும்மா ஒரு அல்ப சந்தோசம்தான்) கடைசியில் எனக்கு மிஞ்சியது ஒரேஒரு இணையதளம் மட்டுமே. கீழ்கண்ட இணையதளத்திற்கு சென்று Register செய்து இலவசமாக எஸ்.எம்-எஸ் அனுப்ப தொடங்குகள்.

இணையதளத்தின் முகவரி : Way2SMS


ஒரு எஸ்.எம்.எஸ்-யில் 92 எழுத்துக்கள் மட்டுமே அனுப்ப முடியும், இந்த ஒரு குறை மட்டும்தான் மற்ற படி தாங்கள் அனுப்பிய எஸ்.எம்.எஸ் 1 நிமிடத்துக்குள் தாங்கள் அனுப்பும் நபருக்கு போய் சேர்ந்துவிடும். மேலும் நம் எஸ்.எம்.எஸ்-உடன் ஒரு விளம்பரமும் போய் சேரும். பின்ன இலவச சேவை என்றால் சும்மாவா.

நம்மில் பலர் இப்பொழுது அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருகிறார்கள், இந்தியாவில் உள்ள நண்பர்கள், உறவினர்களுடன் messenger மூலம் பேசிகொள்கிறோம். நாம் online வரும் நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்துகொள்வோம். அப்படி இல்லாத பட்சத்தில் திடிரென்று அமெரிக்காவில் உள்ள ஒருவருடன் chat செய்ய வேண்டும் அவரை அவருடய கைபேசியில் தொடர்புகொண்டு online செய்ய வருமாறு அழைக்கவேண்டும் இதற்கு நாம் ஒரு நிமிடமாவது அவருடன் பேச வேண்டும் அது வீண் செலவு தானே, அதையே நாம் இலவசமாக செய்ய முடியும்போது. ஆமாம் அமெரிக்காவிலுள்ள எந்த ஒரு கைபேசிக்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் செய்ய கீழ்கண்ட சுட்டிகளை கிளிக் செய்யுங்கள். இதில் நம் கூகிலும் ஒரு இணையதளம், எல்லா நாட்டிற்கும் அவர்கள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

இணையதளத்தின் முகவரிகள் :

இதே போல் UK-வில் உள்ள கைப்பேசிகளுக்கு இலவசமாக எஸ்.எம்.எஸ் செய்ய கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்யவும்.

2 comments:

Anonymous said...

தகவலுக்கு நன்றி!
அமெரிக்காவில் உள்ளவருக்கு எஸ் எம் எஸ் இணையதளம் மூலம் அனுப்பி வைத்தேன்.
பதில் இல்லை. போய் செருவதற்கு நேரம் ஆகுமோ?

bvs said...

நான் அனுப்பி பார்த்த பொழுது உடனே சென்று விட்டது, நீங்கள் அனுபிய நபரிடம் மின்னஞ்சல் மூலம் கேட்டு பாருங்கள். அவர்கள் பதில் தராமலும் இருந்திருக்கலாம் அல்லவா ?

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே தரவும்


Powered by FeedBlitz