Showing posts with label Usefull information. Show all posts
Showing posts with label Usefull information. Show all posts

Wednesday, August 6, 2008

WorldWide Telescope - விண்வெளியை கண்குளிர கண்டுகளிக்க

ஏல்லொருக்கும் இந்த ஆசை கண்டிப்பாக இருக்கும், விண்வெளிக்கு விண்கலம் மூலம் செல்ல வேண்டும் அல்லது தொலை நோக்கி (டெலஸ்கொப்பு) மூலமாகவாவது விண்வெளியை பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதற்கு நம் வருமானம் (கண்டிப்பா என்னுடையா வருமானம்) போதாது. நமக்கு மைகிரோஸாப்டு உதவும். அட ஆமாங்க மைகிரோஸாப்டு காரங்க நம் ஆசையை நிறைவேற்றி வைப்பார்கள். ரொம்பத்தான் ஆசை அவங்க நம்மல அங்க அனுப்ப மாட்டாங்க, ஆனா அதற்கு பதிலா அவர்களுடைய "WorldWide Telescope" மூலமா விண்வெளியை நமக்கு காட்டுவார்கள். இந்த மென்பொருள் நம் கணிணியை ஒரு தொலை நோக்கி கருவியாக மாறி விடும். பல பெரிய விஞ்ஞானர்கள் வழிகாட்டுதலில் நாம் நம் இடத்தில் இருந்தபடியே விண்வெளியை ஒரு வலம் வரலாம்.

WorldWide Telescope மைகிரோஸாப்டுக்கு சொந்தமானது என்பதால் இதை நிறுவ தங்களிடம் Winsdows XP SP2-வோ அல்லது Windows Vista-வோ இருக்க வேண்டும். அது மட்டுமின்றி Direct X version 9 மற்றும் .NET Framework 2.0 நிறுவி இருக்க வேண்டும். தங்களிடம் மிக அதி வேகமான இணையதளம் இருந்தால் நலம். மிக அதிகமான தரவுகளை இது சேமிக்கும் என்பதால் அதிக அளவு கணிணியில் இடம் இருத்தல் நலம்.

WorldWide Telescope மென்பொருளை தரையிரக்கம் செய்து கொள்ள கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் :

WorldWide Telescope மென்பொருள்

அனைத்தையும் படித்து விட்டு தரையிரக்கம் செய்யுங்கள்.

Tuesday, August 5, 2008

iCopy - இலவச ஒளி பிரதி (ஜெராக்ஸ்) மென்பொருள்

நான் இந்த மென்பொருளை பற்றி ஒரு பத்து வருடம் முன்பு கூறியிருந்தால் உங்களுடைய பணத்தையும், நேரத்தையும் மிச்சம் பிடிக்க உதவியதற்கு என்னை மிகவும் பாராட்டியிருப்பீர்கள் (ஏன்டா முன்னாடியே சொல்லலைன்னு திட்டாம இருந்தா சரி), ஏனென்றால் அப்பொழுது ஒளி வருடி (ஸ்கெனர்), அச்சு பொறி (பிரிண்டர்), தொலை நகலி இயந்திரம் (fax மெசின்) அனைத்தும் அடங்கிய இயந்திரம் மிகவும் விலை அதிகம், ஆனால் இப்பொழுது மிகவும் கம்மி விலைக்கு கிடைக்கின்றன. இருந்தாலும் இந்த மென்பொருளை பகிர்ந்து கொள்வதில் தப்பு ஒன்றும் இல்லை.

தங்களிடம் ஒரு ஒளி வருடி மற்றும் ஒரு அச்சு பொறி உள்ளது, நீங்கள் எப்படி ஒளி பிரதி எடுப்பீர்கள் ? மிகவும் சரி, நானும் உங்களை போல் தான் இந்த மென்பொருளை கண்டறிவதற்கு முன் அந்த முறையை பயன்படுத்தி வந்தேன். நாம் ஒளி பரதி எடுக்க விரும்பும் கோப்பை பெயிண்டு புரோகிராமில் (Paint Program) ஸ்கென் செய்ய வேண்டும் பிறகு அதை பிரிண்டு செய்ய வேண்டும், இதற்கு சில நிமிடங்கள் ஆகும்.

அதுவே இந்த iCopy மென்பொருள் நம்மிடம் இருந்தால் கண் இமைக்கும் நேரத்தில் ஒளி வருடி-யில் என்னென்ன கோப்புகளை வைக்கிறோமோ அவை அனைத்தையும் ஒளி பிரதி எடுத்துக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளைக் கொண்டு கோப்பின் பிரைட்னெஸ் (brightness), கான்டிராஸ்டு, (contrast), காப்பிகளின் எண்ணிக்கை போன்றவற்றை தீர்மானிக்கலாம்.

iCopy மிக சிறிய மென்பொருள் என்பதால், அதை மிக சுலபமாக நம் பென் டிரைவில் காபி செய்து கொள்ளலாம். iCopy இது ஒரு விண்டோஸ் மென்பொருள், ஆகவே விண்டோஸ் கனிணியில் மட்டுமே பயன்படுத்த முடியும், மாக் (Mac) கணிணியில் பயன்படுத்த இயலாது.

iCopy மென்பொருளை தரையிரக்கம் செய்து கொள்ள கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் :

Saturday, May 31, 2008

நம் தரவுகளை / கோப்புகளை கணிணியிலிருந்து முற்றிலுமாக அழிப்பது எப்படி ?

நீங்கள் தங்கள் Recycle Bin-யிலிருந்து தங்களுக்கு தேவையில்லாத கோப்புவை அழித்துவிட்டால் தங்கள் கணிணியிலிருந்து அந்த கோப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. தங்கள் கோப்பு இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டும் தொடுப்புகள் (links) மட்டுமே FAT அட்டவணையிலிருந்து அழிக்கப்படுகின்றன, தங்கள் கணிணியிலிருந்து அழிக்கப்படுவது இல்லை. அப்படிப்பட்ட கோப்புகளை மீட்க நிறைய மென்பொருட்கள் உள்ளன, அப்படிப்பட்ட ஒரு இலவச மென்பொருளை பற்றி இங்கே காண்க : Restoration.

இது போல் உள்ள மென்பொருட்களினால், Experts-ஆலும் மீட்க படாதவாரு எப்படி நம் கோப்புகளை அழிப்பது ? அதற்கான தீர்வு தான் இந்த Eraser File Shredder மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருள். இதை நம் கணிணியில் நிறுவிய பிறகு நாம் முற்றிலும் அழிக்க நினைக்கும் கோப்புவை ரைட் கிளிக் செய்தால் "Erase" என்று வரும், அதை கிளிக் செய்ய வேண்டும் ("Delete" என்பதை கிளிக் செய்தால், "Restoration" போன்ற மென்பொருளை கொண்டு மீட்க முடியும்), பிறகு "Are you sure you want to erase “கோப்பு-வின் பெயர்” ?" என்று வழக்கம் போல் கேட்கும், "Yes" என்பதை கிளிக் செய்யவும், பிறகு அதன் வேலையை அது ஆரம்பிக்கும் சில நிமிடங்கள் கழித்து ஒரு Pop-up Window வரும் அதில் "OK" என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்கள் கோப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டது.

Eraser File Shredder மென்பொருளை கீழ்கண்ட சுட்டியிலிருந்து தரயிறக்கம் செய்து கொள்ளவும் :

Eraser File Shredder Free Software

அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்பது எப்படி?

தவறுதலாக நாம் ஒரு கோப்புவை (File) நமது கணிணியிலிருந்து நீக்கி விட்டோம், அதை நம் Recycle Bin-யிலிருந்து அதை நாம் பெற்றுக்கொள்ளலாம் என்பது நம் எல்லொருக்கும் தெரிந்ததே. ஆனால் நாம் நம் Recycle Bin-யிலிருந்தும் அந்த கோப்பையை நீக்கிவிட்டோம் என்றால் அதை எப்படி மீட்பது ? அதற்கு உதவும் மென்பொருள்தான் இந்த Restoration. இது ஒரு இலவச மென்பொருள், மிகவும் எடை கம்மியான மென்பொருள். இந்த மென்பொருளை நம் கணிணியில் நிறுவ தேவையில்லை.

மேலும் இதை உபயோகப் படுத்துவதற்கு மிகவும் எளிது. இந்த மென்பொருளை திறந்து, நாம் மீட்க விரும்பும் கோப்பு இருந்த Folder-க்கு சென்று அந்த கோப்பின் பெயரை தச்சிடவேண்டியது தான், நம் கோப்பு மீட்கப்பட்டுவிடும்.

இந்த மென்பொருளை தரயிறக்கம் செய்ய கீழேயுள்ள சுட்டியை சொடுக்கவும் :

Restoration free software

பாதுகாப்பின் காரணமாக தாங்கள் ஒரு கோப்புவை அழிக்க நினைத்தால் (இந்த Restoration மென்பொருள் போன்ற மென்பொருட்களாலும் மீட்க படக் கூடாது என்று நினைத்தால்) இந்த பதிவை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் : நம் தரவுகளை / கோப்புகளை கணிணியிலிருந்து முற்றிலுமாக அழிப்பது எப்படி ?

Friday, May 30, 2008

மிக பெரிய கோப்புவை மின்னஞ்சலில் அனுப்புவது எப்படி?

நம்மிடம் ஒரு மிக பெரிய ZIP கோப்புவோ அல்லது Word கோப்புவோ அல்லது ஏதோ ஒரு கோப்பு உள்ளது, அதை நாம் எப்படி மின்னஞ்சல் மூலமாக அனுப்புவது ?

அதற்கு உதவவேதான் இந்த இலவச மென்பொருள் "Wind". இந்த மென்பொருளை கொண்டு நாம் மிக சுலபமாக நம் கோப்புயை Split செய்யலாம். பிரிக்கப்பட்ட கோப்புவை மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம். அல்லது நம்மிடம் இருக்கும் பல Floppy-களை கொண்டு சேமித்து எடுத்துச் செல்லலாம். ஏன்னென்றால் இந்த மென்பொருளின் உதவியோடு நமது கோப்புவை 50 Kb முதல் 650 Mb வரை பிரிக்கலாம்.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள சுட்டியை சொடுக்கவும் :

Wind Free Software

Thursday, May 29, 2008

Microsoft Word-யில் Text-ஐ Table-ஆக மாற்றுவது எப்படி ?

சில நேரங்களில் இது நமக்கு தேவைப்படும், உதாரணமாக நாம் PDF கோப்புவிலிருந்து Word கோப்புக்கு மாற்றும் பொழுது, table-கள் சில நேரம் table-ஆக வராமல் text-ஆக வரும், ஆனால் நமக்கோ அது table-ஆக இருந்தால் நலம் என்று தோன்றும், அப்படிப்பட்ட நேரங்களில் இந்த டெக்னிக் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

Text-ஐ table-ஆக மாற்றுவது எப்படி ?
கீழ்கண்ட படத்தில் உள்ளது போல் தங்களிடம் Text உள்ளது என்று வைத்துக்கொள்வோம், அதை table-ஆக மாற்றுவது மிகவும் சுலபம்.


தாங்கள் தனி தனி column-கலாக வர நினைக்கும் text-ஐ ஏதாவதொரு Special Character-ஐ கொண்டு கீழேயுள்ள படத்தில் உள்ளது போல் சேர்க்கவும்:



இப்பொழுது நாம் table-ஆக மாற்ற விரும்பும் text-களை செலக்ட் செய்து கொள்ளவும், பின்பு "Table" -> "Convert" -> "Text-to-table"-க்கு செல்லவும்.



இப்பொழுது இதில் "Number of columns”-யில் 2 என்றும். "Separate text at"-இல் "Other"-ஐ செலக்ட் செய்து நாம் உபயோகபடுத்திய Special Character-ஐ தச்சிட வேண்டும்.



பிறகு "OK"-வை கிளிக் செய்யவும். கீழேயுள்ள படத்தில் உள்ளது போல் தங்கள் Text Table-ஆக மாறி காட்சி தரும்.


Monday, May 19, 2008

PDF பக்கங்களை "Re-Order" செய்வது எப்படி ? PDF கோப்புகளை இணைப்பது (Merge) எப்படி ?

சென்ற பதிவின் தொடர்ச்சியாக, PDF சம்பந்தமாக, இந்த பதிவை பதிவு செய்கிறேன். இந்த பதிவில் நாம் எப்படி ஒரு PDF கோப்பையை "Re-order" செய்வது, "Merge" செய்வது என்று பார்ப்போம்.

முதலில் "Re-Order" செய்வது எப்படி என்று பார்ப்போம். நம்மிடம் ஒரு PDF கோப்பு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதில் ஒரு சில பக்கங்கள் நமக்கு தேவையில்லை என்று வைத்துக்கொள்வோம், அதை மட்டும் எப்படி அகற்றுவது ? அல்லது அந்த PDF கோப்பின் ஒரு சில பக்கங்களை ஒழுங்கு படுத்த வேண்டும், அதாவது 10-வது பக்கம் 5-வது பக்கமாக இருக்க வேண்டும், 8-வது பக்கம் 20-வது பக்கமாக இருக்க வேண்டும், இதை எப்படி செய்வது ? கவலையை விடுங்க, இதற்கானா தீர்வுதான் இந்த "PDF Hammer". பயன் படுத்துவதற்கு மிகவும் எளிது. இந்த இணையதளத்தில் சென்று நமது PDF கோப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும், பிறகு அவர்கள் கொடுத்திருக்கும் "Delete", "Move forward", "Move Backward"... பட்டன்களை கொண்டு நமக்கு தேவையான வடிவில் நமது PDF கோப்பையை "Re-Order" செய்து கொள்ளலாம். பிறகு "Re-Order" செய்யப்பட்ட PDF கோப்பையை "Save" கொண்டால் நமது வேலை ஆயிற்று.இப்போதைக்கு நாம் 100 பக்கங்கள் கொண்ட PDF கோப்பை மட்டுமே பதிவேற்றம் செய்து "Re-Order" செய்ய முடியும். கூடிய விரைவில் அதிக பக்கங்களை "Re-Order" செய்து கொள்ள அவர்கள் ஏற்பாடு செய்வார்கள் என்று எதிர்பார்போமாக.

இதோ PDF Hammer இணையதளத்தின் சுட்டி :
PDFHammer

இப்பொழுது நாம் எப்படி PDF கோப்புகளை இணைப்பது என்று பார்போம். நான் சென்ற பதியில் கூறிய "PDF ReDirect" மென்பொருளை கொண்டு நாம் எவ்வளவு PDF கோப்புகளை வேண்டுமானாலும் இணைத்துக் (Merge) கொள்ளலாம். தங்கள் PDF ReDirect-ஐ திறந்து, அதில் நாம் இணைக்க விரும்பும் PDF கோப்புகளை பதிவேற்றம் செய்ய வேண்டும், பிறகு "Merge List"-யில் சேர்த்து விட்டு, அதற்கு ஒரு பெயர் கொடுத்து "Save" பட்டனை கிளிக் செய்யவும், இணைக்கப்பட்ட PDF கோப்பு தயார்.

PDF ReDirect மென்பொருளை தறையிறக்கம் செய்ய கீழேயுள்ள சுட்டியை கிளிக் செய்யவும் :
PDF ReDirect

Sunday, May 18, 2008

Word, Excel, PPT கோப்புகளை PDF கோப்புகளாக மாற்ற உதவும் இலசவ மென்பொருள்

நம்மில் பலர் இன்னும் ஒரு Word கோப்பை PDF கோப்பாக மாற்ற Adobe PDF Creator-ஐ தான் பயன்படுத்த முடியும் அல்லது வேறு ஒரு மென்பொருளை (உதாரணத்திற்கு PDF Transformer) காசு கொடுத்து வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் அப்படித்தான் கடந்த சில மாதங்கள் வரை நினைத்துக் கொண்டிருந்தேன். ஆமாங்க நான் சொல்லப்போகும் மென்பொருளைக் கொண்டு இலவசமாக நம் Word, Excel, PPT... கோப்புகளை PDF கோப்புகளாக மாற்றிக்கொள்ளலாம்.

சரி நாம் ஏன் PDF கோப்பாக மாற்ற வேண்டும் என்று கேட்கிறீர்களா ? PDF கோப்புகளால் பல நன்மைகள் இருக்குங்க. நாம் ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பும் பொழுது அவர்களிடமும் நாம் உபயோகப் படுத்திய Font இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் உபயோகப் படுத்திய Font இல்லாமலே அவர்களால் நம் கோப்பையை படிக்க முடியும்.

இரண்டாவது பயன், நாம் எப்படி நம்முடையை கோப்பை எவ்வாரு Format பண்ணியுள்ளோமோ அதே Format-யில் நம் கோப்பை Print செய்ய இயலும்.

மேலும் முக்கியமான ஒன்று, இந்த ஒரு காரணத்திற்காகதான் நான் PDF கோப்புக்கு மாற்றுகிறேன். பொதுவாகவே நாம கஷ்டப்பட்டு ஒரு கோப்பை உருவாக்குவோம், அதை நம் மேலதிகாரிகள், Copy-Paste செய்து அதில் அவர்களுடைய பெயறை போட்டிக்கொண்டு பெயர் வாங்கிக் கொள்வார்கள், கஷ்டபட்டு தயாரித்த நமக்கு 3 நாமம். ஆனால் இதையெ நாம் PDF கோப்பாக மாற்றி நம் பெயரை பதித்துக் கொண்டால், அவர்களால் மாற்ற முடியாது, Copy-Paste-உம் செய்ய முடியாது. இப்படி பல நன்மைகள் PDF கோப்பையை உருவாக்குவதன் மூலம் கிடைக்கிறது.


சரி இப்பொழுது நம் இலவச PDF Creator மென்பொருளை பற்றி பார்போம். அதன் பெயர் PDF ReDirect. இது ஒரு Freeware, ஆகவே நாம் எந்த விதமான Copyright பயம் இல்லாமல் உபயோகிக்கலாம்.

கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்து PDF ReDirect மென்பொருளை தங்கள் கணிணியில் நிறுவிக் கொள்ளுங்கள் :

PDF-ReDirect

எப்படி நம் கோப்பை PDF கோப்பாக மாற்றுவது ? நீங்கள் PDF கோப்பாக மாற்ற விரும்பும் கோப்பையை திறந்து கொள்ளுங்கள். இப்பொழுது File-Print-ஐ கிளிக் செய்யவும். இப்பொழுது தங்கள் Printer-ருக்கு பதிலாக PDF ReDirect-ஐ Select செய்யவும், பிறகு OK-வை செய்யவும் அவ்வளவே. இப்பொழுது தங்கள் PDF கோப்பு தயார்.

அது சரி நான் மேலே கூறியுள்ளது போல எப்படி நம் பெயரை எழுதுவது ? நீங்களே தேடிப்பாருங்கள், விடை கிடைக்கும்.

Saturday, May 3, 2008

Safer India - கிரண் பேடியின் இணையதளம்

உண்மையிலே இணையதளத்தின் தலைப்பை போல் இது ஒரு பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க உருவாக்கப்பட்டதுதான் இந்த இணையதளம் என்பதில் இம்மியளவும் சந்தேகம் இல்லை. யாருக்காக இந்த இணையதளம் ? தங்கள் Complaint-ஐ போலீஸ் ஏற்கவில்லை அல்லது நீங்கள் போலீசாரிடம் ஒரு Complaint கொடுத்துள்ளீர்கள், ஆனால் அவர்களோ எந்தவித முயற்ச்சியையும் எடுக்கவில்லை, நீங்கள் கேட்டாலும் ஒரு பதிலும் இல்லை, இப்படிப்பட்ட நேரத்தில் உதவுவதுதான் இந்த இணையதளம். சரி இவர்கள் நமக்கு எப்படி உதவுவார்கள் என்று கேட்கிறீர்களா, இந்த இணையதளத்தில் நாம் Complaint செய்தால், அது இவர்கள் மூலம் சம்பந்தப்பட்ட போலீஸ் Head Quaters-க்கு செல்லும். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க இவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இது நமது கிரண் பேடியின் இணையதளம் என்பதால் நன்றாக செயல்படும் என்று நம்பிக்கையுள்ளது.

இணையதளத்தின் முகவரி : http://www.saferindia.com/kiranbedi/
மேலும் விபரங்கள் அறிய மேற்கூறிய இணையதளத்தை பார்வையிடுங்கள்.

PDF கோப்பையை மிக வேகமாக திறக்க உதவும் Foxit மென்பொருள்

என்னது நீங்கள் இன்னமும் PDF கோப்பையை திறக்க Acrobate Reader-ஐ உபயோகிக்கிறீர்களா ? அட ஆமாங்க, நீங்க இன்னமும் அந்த Acrobate Reader-ஐ கட்டிக்கொண்டு, PDF கோப்பு Open ஆவதற்கு பல நிமிடங்கள் காத்துக்கொண்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பள்ள.

Acrobate Reader-ஐ நான் உபயோகிக்கித்து பல மாதங்கள் ஆகிறது, சும்மா Foxit-ஐ Install செய்து பார்த்தேன், அட என்ன வேகம், கிட்டத்தட்ட 100 % Acrobate Reader-ஐ காட்டிலும் அப்படி ஒரு வேகம். Acrobate Reader-யில் தேவையில்லாத, நாம் உபயோகபடுத்தாத பல feature-கள் உள்ளன, அதனாலயே Acrobate Reader Open ஆக பல கணங்கள் ஆகும், ஆனால் Foxit அப்படியல்ல 3 MB மட்டுமே, தேவையில்லாத feature-கள் கிடையாது, PDF கோப்பையை மிக வேகமாக திறக்கும்.

நீங்களே தரையிறக்கம் செய்து பாருங்கள், நிச்சயமாக நீங்கள் 23 MB கொண்ட அந்த Acrobate Reader-ஐ Uninstall செய்வீர்கள், அது மட்டும் நிச்சயம்.

Foxit மென்பொருளை கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து தரையிறக்கம் செய்து கொள்ளுங்கள்:


Direct Link to Download Foxit

Thursday, May 1, 2008

YouTube வீடியோக்களை தரையிறக்கம் செய்வது எப்படி ?

நம்மில் பலருக்கு YouTube வீடியோ பார்க்கும் பழக்கம் இருக்கிறது, சில சமயங்களில் நாம் பார்க்கும் வீடியோக்களை சில நாட்கள் கழித்து திரும்ப பார்க்க வேண்டும் போல் தோன்றும். அதை மறுபடியும் பார்க்க திரும்பவும் தரையிறக்கம் செய்ய வேண்டும். ஆக தங்களுக்கு மிகவும் பிடித்த வீடியோவை தரையிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம் அல்லது ஒரு VCD-யிலோ அல்லது ஒரு DVD-யிலோ எரித்து வைத்துக்கொண்டு TV-யில் பார்க்கலாம்.

சரி தரையிறக்கம் செய்வது எப்படி என்று பார்போம். இதற்கான பல மென்பொருட்கள் இணை எங்கும் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் அதில் 99% மென்பொருள்கள் .flv கோப்புகளாக மட்டுமே தரையிறக்கம் செய்ய உதவும். அதை நாம் அன்றாடம் பார்க்கும் RealPlayer-யிலோ, Windows Media Player-யிலோ, etc பார்க்க முடியாது. ஆக அந்த .flv கோப்புகள் மறுபடியும் .mpg கோப்புகளாக மாற்றவேண்டும் (அதற்கான மென்பொருள்கள் இலவசமா இணையதளதில் உள்ளன, அதை பற்றி பிறகு சொல்கிறேன்). ஆனால் நான் சொல்லப்போகும் மென்பொருளைக் கொண்டு தாங்கள் நேரடியாக .mpg கோப்பாக தரையிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

முதலில் கீழ்கண்ட இணையதளத்திலிருந்து YouTube Converter தரையிறக்கம் செய்து கொள்ளவும் :

யூடியுப் தரையிறக்க மென்பொருள்


சரி ஆயிற்று இப்பொழுது எப்படி தரையிறக்கம் செய்வது ?
தாங்கள் தரையிறக்கம் செய்ய விரும்பும் YouTube வீடியோவுக்கு செல்லவும், தங்கள் வலது புறத்தில் யார் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்தது, எப்பொழுது செய்யப்பட்டது என்று கூறப்பட்டிருக்கும். அதற்க்கு பக்கத்தில் (More Info) என்று இருக்கும்.
More Info-வை கிளிக் செய்தவுடன் தங்களுக்கு அந்த வீடியோவிற்கான URL (இணையதள முகவரி) கிடைக்கும்.

அதை Copy செய்து கொண்டு தங்கள் YouTube Converter-க்கு செல்லுங்கள். அங்கே YouTube URL என்று இருக்கும் இடத்தில் அந்த URL-ஐ Paste செய்யுங்கள். பிறகு File Type-யில் mpg என்று Select செய்யுங்கள்.

பிறகு தாங்கள் அந்த வீடியோவை தங்கள் கணிணியில் சேமிக்கப்போகும் இடத்தை சுட்டிக் காட்டுங்கள் பிறகு "Convert" பட்டனை கிளிக் செய்யுங்கள் அவ்வளவுதான் தரையிறக்கம் செய்தாயிற்று.

Wednesday, April 30, 2008

ஹாக்கர் (Hacker)-களிடமிருந்து பாதுகாப்பாய் இருக்க

இப்பொழுதெல்லாம், எங்கேங்கயோ இந்த ஹாக்கர்கள் (Hackers) புகுந்து விளையாடுராங்க, பல பிரபலமான வங்கி இணையதளங்கள், நாசா இணையதளம் etc. அப்படியிருக்க நாம எம்மாத்திரம் ? அதற்காக நாம் சும்மா இருந்துவிட முடியுமா, நம்மால் முடிந்த வரை ஹாக்கர்களிடம் ஏமாறாமல் இருப்போமே. நாம் நம் வங்கி சம்பந்தப்பட்ட (பயணர் சொல் மற்றும் கடவுச் சொல்) ஹாக்கர்களிடம் பறிகொடுக்காமல் இருப்பதற்கு இதோ சில வழிகள்.
எல்லாம் நமக்கு தெரிந்ததுதான் இருப்பினும் கவனமாக இருப்பது நல்லதுதானே. தங்கள் வங்கி சம்பந்தப்பட்ட பயணர் சொல் மற்றும் கடவுச் சொல்லை தங்கள் கணிணியில் எங்கும் SAVE செய்து வைக்காதீர்கள்.

மற்றும் தாங்கள் வங்கியின் இணையதளம் செல்லும் பொழுது கவனிக்கவேண்டியவை, NETBANKING செய்யும் பொழுது தாங்கள் செல்லப்போகும் இணையதளம் http-கு பதிலாக https (s அதிகமாக இருக்க வேண்டும்) என்று இருக்க வேண்டும்.


மேலும் அந்த இணையதள பக்கத்தின் கீழ் ஒரு பூட்டு இருக்க வேண்டும்.


மற்றும் கடைசியாக அந்த பூட்டை கிளிக் செய்தால் "Issued to : .... தங்கள் இணையதளத்தின் பெயர்" இருக்கிறதா என்று பாருங்கள்.


இதையெல்லாம் நாம் கவனித்தால் நிச்சயமாக ஹாக்கர்களிடமிருந்து தப்பிக்கலாம்.

தற்காலிக மின்னஞ்சல் முகவரிகள் (Free temporary mails)

நேத்து நிறைய மொக்கை / குப்பை பதிவுகளா போட்டாச்சேன்னு, இந்த பதிவை எழுத ஆரம்பித்தேன், உடனே மின்சாரம் (மழையின் காரணமாக) துண்டிக்கப்பட்டுவிட்டது. சரி இன்றைக்கு எழுத முடியாதுன்னு எடுத்து வைத்துவிட்டேன். உன் புராணம் எல்லாம் வேண்டாம் விஷயத்துக்கு வா என்கிறீர்களா ? அதுவும் சரிதான்.

இப்பொழுதெல்லாம் மின்னஞ்சல் (Email) Spam ரொம்ப அதிகமாயிடிச்சு, சரி வந்த வரைக்கும் ஒன்றும் பண்ண முடியாது, இனிமேல் அதிகமாக வராமல் தடுக்கலாம். இப்பொழுது உங்களுக்கு ஏதாவது ஒரு மென்பொருள் வேண்டும் அதை பதிவிறக்கம் செய்ய தங்கள் மின்னஞ்சலை கேட்கிறார்கள், ஆனால் உங்களுக்கோ சின்ன சந்தேகம் எங்கே அவர்கள் Spam அனுப்புவர்களுக்கு விற்று விடுவார்களோ என்று, இருந்தாலும் பதிவிறக்கம் செய்ய ஆசை, இது மாதிரியான சமயத்துல உதவுவதுதான் இந்த தற்காலிக மின்னஞ்சல் முகவரிகள் (Free temporary mails), இதற்காகவே பல இணையதளங்கள் உள்ளன, ஆனால் நான் பயன்படுத்துவது இந்த இரு இணையதளங்களை மட்டுமே.

முதலாவது அதுவே தங்கள் முகவரியை கொடுத்துவிடும் (அந்த வேலை கூட நமக்கு கிடையாது) 4 மணி நேரம் மட்டும் இந்த முகவரி செயல்பாட்டில் இருக்கும். இரண்டாவது நாம் கிளிக் செய்தவுடன் தான் தங்கள் முகவரியை கொடுக்கும், எவ்வளவு நிமிடம் நம் முகவரி செயல்பட வேண்டும் என்று நாம் முடிவுசெய்யலாம் (10 முதல் 60 நிமிடம் வரை).
இதோ அந்த தற்காலிக மின்னஞ்சல் இணையதளங்களின் முகவரிகள்

Mintemail

20MinuteMail

இவை அனைத்தையும் படித்துவிட்டு ஜீமெயிலில், யாஹூமெயிலில், ஹாட்மெயிலில் ID பல இலவசமாகதானே கிடைக்குது அதில் புதியதாக ஒரு முகவரியை கிரியேட் (create) செய்து கொண்டால் போயிற்று என்கிறீகளா. அப்படி நாம் செய்வதால், ஒரு ID உபயோகமற்று போகிறது, அதே பெயரில் மின்னஞல் முகவரியை எதிர்பார்க்கும் பேர்கள் அனேகம், ஆகவே இது போன்று செய்யாமல் தற்காலிக மின்னஞ்சல் முகவரிகளை உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Sunday, April 27, 2008

7z - இலவச கோப்பு இறுக்க (File Compression) மென்பொருள்


நாம் அன்றாடம் உபயோகிக்கும் மென்பொருள் WinZip.
ஆனால் எப்பொழுது அதை உபயோகித்தாலும் "Use Evaluation Version" வந்து தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும். அதற்கு நாம் WinZip-ஐ வாங்க வேண்டும் (இலவசமாக கிடைக்கும் பொழுது நாம் ஏன் அதை காசு கொடுத்து வாங்க வேண்டும், அதற்கு பதில் நாம் "Use Evaluation Version" கிளிக் செய்து விட்டு போவோம் இல்லையா ?).

சரி இதற்கு வேறு ஏதாவது தீர்வு இருக்கிறதா என்று பார்த்த பொழுது கிடைத்ததுதான் இந்த 7-zip மென்பொருள். இதனால் மற்றுமொரு நன்மையும் இருக்கிறது, அது என்னவென்றால் இதை கொண்டு 7-zip முறையில் WinZip-ஐ காட்டிலும் 30 முதல் 40 சதவிதம் வரை நாம் விரும்பும் கோப்பை இறுக்கம் (File Compress) செய்ய முடியும்.

அப்புறம் என்ன கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்து தரையிறக்கம் செய்து கொள்ளுங்கள்:

7-Zip

மேலும் ஒரு தகவல்:

இதன் மூலம் RAR, CAB, ISO, ARJ, LZH, CHM, MSI, WIM, Z, CPIO, RPM, DEB மற்றும் NSIS வகை கோப்புகளை Unpacking செய்யலாம். 7z, ZIP, GZIP, BZIP2 மற்றும் TAR வகை கோப்புகளை Packing / Unpacking செய்யலாம்.

Saturday, April 26, 2008

Windows XP, 2000, 98-காண இலவச மென்பொருள்கள்

தாங்கள் தங்கள் Windows-ஸிற்கு இலவச மற்றும் சட்டபடியான மென்பொருளை தேடிக்கொண்டிருக்கிறீர்களா ? அப்ப, நீங்கள் சரியான இடத்திற்குதாங்க வந்திருக்கீங்க. Windows 98, 2000, XP-காண இலவச மற்றும் சட்டபடியான மென்பொருட்களை, WinLibre என்னும் இணையதளம் நமக்காகவே தேடித்தேடி வைத்திருக்கிறார்கள்.

Office (word processor, spreadsheet, presentation), Internet (web, email, messaging), Multimedia (music, video), Create (drawing, music), Tools (file compression, antivirus), இப்படி நமது எல்லா விதமான தேவைகளுக்கும் அவர்கள் மென்பொருட்களை வைத்திருக்கிறார்கள். ஆகவே, அனைவரும் சட்டவிரொதமான மென்பொருட்களுக்கு செல்லாமல், WinLibre-ஐ பயன்படுத்தி நன்மையடைய வேண்டும்.

Saturday, April 19, 2008

இணையம் வழி இலவச குறுஞ்செய்தி (Free SMS via Web)

நாம எவ்வளவு சம்பாதித்தாலும் இலவசம் என்று சொன்னா வேணாம் என்று சொல்கிறோமா? என்ன பண்ணுவது அது நம் இயல்பு (அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன?). இணையம் வழியாக இலவசமாக எஸ்.எம்.எஸ் அனுப்ப ஏதாவது இணையதளம் இருக்கிறதா என்று தேடிபார்த்தேன். பலன் நிறைய இணையதளம் என் கண்ணில் சிக்கியது, ஆனால் பாருங்க நமக்குன்னு வரும்போது எதுவுமே வேலை செய்யாது அல்லது 10 மணி நேரத்திற்கு பிறகோ அல்லது மறு நாளைக்கோ போய் சேரும் (உங்களுக்கும் அப்படிதான் என்று நினைக்கிறேன், சும்மா ஒரு அல்ப சந்தோசம்தான்) கடைசியில் எனக்கு மிஞ்சியது ஒரேஒரு இணையதளம் மட்டுமே. கீழ்கண்ட இணையதளத்திற்கு சென்று Register செய்து இலவசமாக எஸ்.எம்-எஸ் அனுப்ப தொடங்குகள்.

இணையதளத்தின் முகவரி : Way2SMS


ஒரு எஸ்.எம்.எஸ்-யில் 92 எழுத்துக்கள் மட்டுமே அனுப்ப முடியும், இந்த ஒரு குறை மட்டும்தான் மற்ற படி தாங்கள் அனுப்பிய எஸ்.எம்.எஸ் 1 நிமிடத்துக்குள் தாங்கள் அனுப்பும் நபருக்கு போய் சேர்ந்துவிடும். மேலும் நம் எஸ்.எம்.எஸ்-உடன் ஒரு விளம்பரமும் போய் சேரும். பின்ன இலவச சேவை என்றால் சும்மாவா.

நம்மில் பலர் இப்பொழுது அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருகிறார்கள், இந்தியாவில் உள்ள நண்பர்கள், உறவினர்களுடன் messenger மூலம் பேசிகொள்கிறோம். நாம் online வரும் நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்துகொள்வோம். அப்படி இல்லாத பட்சத்தில் திடிரென்று அமெரிக்காவில் உள்ள ஒருவருடன் chat செய்ய வேண்டும் அவரை அவருடய கைபேசியில் தொடர்புகொண்டு online செய்ய வருமாறு அழைக்கவேண்டும் இதற்கு நாம் ஒரு நிமிடமாவது அவருடன் பேச வேண்டும் அது வீண் செலவு தானே, அதையே நாம் இலவசமாக செய்ய முடியும்போது. ஆமாம் அமெரிக்காவிலுள்ள எந்த ஒரு கைபேசிக்கும் இலவசமாக எஸ்.எம்.எஸ் செய்ய கீழ்கண்ட சுட்டிகளை கிளிக் செய்யுங்கள். இதில் நம் கூகிலும் ஒரு இணையதளம், எல்லா நாட்டிற்கும் அவர்கள் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

இணையதளத்தின் முகவரிகள் :

இதே போல் UK-வில் உள்ள கைப்பேசிகளுக்கு இலவசமாக எஸ்.எம்.எஸ் செய்ய கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்யவும்.

Monday, April 14, 2008

இரயிலில் பயணிப்போரின் அவசர உதவிக்கு - 9962500500

ரெயில்வே பாதுகாப்பு போலீஸ் தெற்கு இரயில்வே மற்றும் வொடாபோன் நிறுவனமும் இணைந்து இரயிலில் பயணிப்போரின் நலன் கருதி 9962500500 என்ற எண்ணை ஒதுக்கியுள்ளனர். அவசர தேவைக்கு இரயிலில் பயணிப்போர் உதவிக்கு போலிஸ் அல்லது வேறு ஏவரேனதும் உதவியை பெற, உதாரணத்திற்கு மருத்துவரின் உதவியை பெற, இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இதன் கட்டுப்பாட்டு அறை சென்னையில் உள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டவுடன் அவர்கள் தங்கள் இரயிலில் பயணிக்கும் பாதுகாப்பு போலிசார் மற்றும் இரயில்வே கார்டுக்கும் தகவல் தெரிவிப்பார்கள், அவர்கள் உடனே தங்கள் உதவிக்கு வருவார்கள்.

ஆகவே இந்த எண்ணை 9962500500 என்ற எண்ணை தங்கள் கைப்பேசியில் வைத்துக் கொள்ளூங்கள். எவர்கேனும் உதவி தேவைப்பட்டாலோ அல்லது தங்களுக்கே தேவைப்பட்டலோ இந்த எண்ணை அழைத்து பயன்பெறலாம்.

தற்போது 70க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் இரயில் மற்றும் சென்னை மின்சார இரயில்களுக்கு இந்த சேவை கிடைக்கும். வரும் காலங்களில் எல்லா இரயில்களுக்கும் இந்த சேவை வழங்கப்படும் என்று நம்புவோமாக.

Saturday, April 12, 2008

கருப்பு கூகிள் - BLACKLE

கூகிள் நமக்கு மிகவும் தெரிந்த ஒன்று, ஆனால் கருப்பு கூகிளை பற்றி தங்களுக்கு தெரியுமா ? ஆமாங்க அதுதான் Blackle. சரி அதுனால என்ன என்று கேட்கிறீர்களா, விஷயம் இருக்குங்க. நாம் எல்லொரும் வெள்ளை நிற வலைப்பக்கங்களுக்கு பதிலாக கருப்பு நிற வலைப்பக்கங்களை உபயோகித்தால் பல கோடி KWHஆண்டொன்றிக்கு மிச்சமாகிறது, அதாவது கிட்டதட்ட 750 KWH கருப்பு கூகிளை உபயோகிப்பதால் ஆண்டொன்றுக்கு சேமிக்கிறோம். இந்த KWH-களை வேறு எதையாவது உபயோகிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகவே "http://www.blackle.com"-யை தங்கள் முதற் பக்கமாக "Home page" வைத்துக் கொள்ளுங்கள், பல ஆயிரம் KWH-களை சேமிக்கத் தொடங்குங்கள்.
இதை மற்றவர்களிடமும் மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Wednesday, April 9, 2008

உடனடியாக இரத்தம் தேவைப்படுகிறதா ?

தங்கள் உறவினர்க்கோ அல்லது தங்களின் நண்பர்கோ அல்லது தங்கள் அக்கம் பக்கத்தினர்க்கோ, எவர்கேனும் அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவை படுகிறதா ? இரத்த தானம் தருபவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். இப்படி உதவுவதற்கென்றே பல வலைத்தளங்கள் உள்ளன. அவற்றில் சில :

http://www.friendstosupport.org/index.aspx

http://www.indiabloodbank.com/index.aspx

http://www.indianblooddonors.com/

இந்த கடைசி வலைத்தளக்காரர்கள் நீங்கள் தங்கள் கைபேசியை கொண்டு குறுஞ்செய்தியை (எஸ்.எம்.எஸ்) அனுப்பினால் அவர்கள் தங்களுக்கு தேவைப்படும் இரத்தம் உள்ளவர்களின் (இரத்த தானம் தர விரும்புவர்கள்) பட்டியலை தங்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவே தருகிறார்கள்.

உதாரணத்திற்கு தங்களுக்கு O+ve வகை இரத்தம் தேவையெனில், தங்கள் கைபேசியின் மூலம் BLOOD 080 O Positive BVS என்று தச்சிட்டு 5676775 என்ற எண்ணுக்கு தங்கள் குறுஞ்செய்தியை அனுப்புங்கள். அவர்கள் தங்களுக்கு பட்டியலை தருவார்கள்.

நீங்கள் அனுப்பும் குறுஞ்செய்தியின் FORMAT கீழ்கண்டவாரு இருக்க வேண்டும் :

BLOOD [space] தாங்கள் வசிக்கும் ஊரின் STD code [space] தேவைப்படும் இரத்தத்தின் பிரிவு (Blood group) [space] தங்கள் பெயர்.

கவனிக்க தாங்கள் O+ve என்று சுறுக்கமாக தச்சிடக் கூடாது O Positive என்றே தச்சிடவேண்டும்.

கூகிள் தரும் இலவச அரட்டை (chat) கருவி

நீங்கள் கூகிள் உபயோகிப்பவரா ? தங்கள் வலைப்பக்கங்களுக்கு வரும் அன்பர்கள், வாடிக்கையாளர்களுடன் பேச (சாட் செய்ய) தங்களுக்கு விருப்பமா ? இதனால் தங்கள் லாபம் கண்டிப்பா கூடும். உதாரணத்துக்கு நீங்க ஒரு டிராவல் ஏஜன்சி உரிமையாளர், நான் பயணம் செய்யும் பொருட்டு தங்கள் வலைத்தளம் பக்கம் வருகிறேன், தங்களுடன் சாட் செய்ய முடிந்தால் நான் நினைக்கும் இடத்திற்கு செல்ல எவ்வளவு பணம் ஆகும், இன்னும் பிற விஷயங்களை பேசி ஒரு முடிவுக்கு வரலாம் அல்லவா, இவ்வகையில் தங்களுக்கு இது இலாபம் தானெ? அதுவும் ஒரு பைசா செலவு இல்லாமல்.

சரி சரி இதை எப்படி செய்வது என்று கேட்கிறீகளா ?

மிகவும் எளிதுங்க, கீழ்கண்ட சுட்டிய கிளிக் செய்யுங்க

கூகிளின் இலவச அரட்டை (chat) கருவி

இப்போ உங்க ஜீமெயில் பயணர் சொல் மற்றும் கடவுச்சொல்லை தச்சிடுங்க. அவர்கள் தரும் ஜாவா CODE-யை Copy செய்து அதை தங்கள் இணைய தளத்தில் paste செய்யுங்கள், அவ்வளவுதான்.

கூடிய விரைவில் தங்களின் வலைத்தளத்தில் கூகிள் சாட் மூலமாக சாட் செய்ய ஆசை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

தங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே தரவும்


Powered by FeedBlitz