தாங்கள் விண்டோஸ் உபயோகிப்பவரா ? உங்கள் இணைய தள அகலப்பட்டியின் (Braodband) வேகத்தை சற்று கூட்ட வேண்டுமா? ஆம் என்றால் இந்த யுக்தி உங்களுக்குத்தான்.
நான் ஏன் விண்டோஸ் உபயோகிப்பவரா என்று கேட்டேன் என்றால் விண்டோஸ் நமக்கு தெரியாமலே 20% எடுத்து கொள்கிறது.
என்னாங்க என் மேல நாம்பிக்கை இல்லையா, நீங்களே பாருங்க. உங்கள் "ஸ்டார்ட்" பட்டனை கிளிக் செய்யவும், "ரன்"-யை கிளிக் செய்யவும். "ரன்"-யில் "gpedit.msc" என்று தச்சிடவும்.
இப்பொழுது உங்களுக்கு "Group Policy" என்ற விண்டோ வரும், அதில் உங்கள் இடது புரத்தில் கீழ்காணும் இடத்திற்கு செல்லவும் :
Computer Configuration --> Administrative Templates --> Network --> QOS Packet Scheduler.
இப்பொழுது தங்கள் வலது புரத்தில் "Limit reservable bandwidth" என்பதை வலது கிளிக் செய்து "Properties"-யை கிளிக் செய்யவும், "Settings"-யில் "Not configured" என்று இருக்கும் ஆனால் Default-ஆக 20 % விண்டோஸ் எடுத்துக் கொள்கிறது, எனவே "Enabled" என்பதில் கிளிக் செய்து 20 % என்று இருப்பதை 0 % என்று மாற்றவும். மாற்றி விட்ட பின்பு "OK" என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது சற்று வேகமாக உங்கள் இணையதளம் வேலை செய்யுங்க. இன்னும் இது போல இணையதள வேகத்தை அதிகரிக்க பல யுக்திகள் இருக்குங்க, அவற்றை வரும் வாரங்களில் பார்போம்.